உலகவெப்பமயமாதல் (Global warming), சுற்றுச்சுழல் மாசுபடல் (environment pollution) என்பன உலகில் இன்று மிகப் பேசப்படும் விடயங்கள்.
Go Green என்ற வார்த்தை பாவிக்கப்படாத இடமே இல்லையெனலாம், Earth Day Network மூலமாக உலகம் முழுவதும் புவிநாள் (Earth Day) முறையாக அனுசரிக்கப்படுகிறது.
உலகவெப்பமயமாதலை ஊக்குவிக்கும் பொருட்கள் அனைத்தும் வேறொன்றால் மாற்றப்பட்டு வருகிறது, உலகை மிகவும் மாசுபடுத்தும் வாகனப் புகையும் பிளாஸ்டிக் போத்தலும் அனைத்துலகிலும் பீடுநடை போடுகின்றன, இவற்றுக்கு மாற்றுத்தேடி உலகு தடுமாறுகிறது.
அண்மைய புள்ளிவிபரங்களின்படி தினமும் 60 மில்லியன் பெற்றோலிய மூலப்பொருட்களினாலான பிளாஸ்டிக் தண்ணீர்ப் போத்தல்கள் (Petroleum based water bottles)வீசப்படுகின்றன,இவை 100 வருடமானாலும் உக்கப்போவதில்லை என்கிறார்கள்.
அன்றாட வாழ்வில் நாம் பாவிக்கும் எத்தனையோ பொருட்கள் மாற்றப்படவேன்டியவை என Go Green ஆர்வலர்கள் கூறுகிறார்கள், இதில் ஒவ்வொரு நபரும்,ஒவ்வொரு குடும்பமும் அக்கறை எடுத்தாலே எவ்வளவோ நிகழ வாய்ப்புண்டு எனவும் கருதுகிறார்கள்.
No comments:
Post a Comment