Monday, September 13, 2010

உலகவெப்ப்பமயமாதல் (Global warming) ஓர் அறிமுகம்


உலகவெப்பமயமாதல் என்ற பதம் 1860 முதல் வரலாற்றுரீதியாக உலகளவில் ஆவணப்படுத்தப்பட்ட பூமிப்பரப்பின் வெப்பத்தை குறிக்கிறது. பல்வேறு நாடுகளைச்சேர்ந்த 2500 விஞ்ஞானிகளின் ஆய்வு அறிக்கைகளின்படி உலகவெப்பமயமாதலின் மூலகாரணம் மனிதகுல செயல்பாடுகளின் விளைவே.

மனிதகுலம் அதன் தேவைகளுக்காய் பயன்படுத்தும் எரிபொருட்களின் கழிவுகள் வெளியிடும் வாயுக்கள், மிக அதிகப்படியாக பூமிப்பரப்பை சுற்றியிருக்கும் வளிமண்டலத்தில் கலக்கின்றன இவ்வளிமண்டலம் பைங்குடில் வாயுக்கள்(Greenhouse Gases) எனப்படும் இதில் நீராவி (Water vapor), கரியமிலவாயு ( Carbon dioxide ), மீத்தேன் (Methane), நைட்ரஸ் ஆக்சைடு (Nitrous Oxide),ஓசோன் வாயு போன்றவை உள்ளன. மனிதர்கள் பாவிக்கும் வாகனங்கள் மற்றும் யந்திரங்கள் வெளியேற்றும் அதிகப்படியான கரியமிலவாயு (Carbon dioxide)இவ்வளிமண்டலத்தில் சேர்வதால் ஏற்படும் சமச்சீரின்மை உலகவெப்பமயமாதலின் மிகப்பெரும் காரணியாகிறது.

கடல் நீர் மற்றும் பூமிப்பரப்பின் வருடாந்த சராசரி வெப்பநிலை கடந்த பத்து வருடங்களில்
கணிசமான அளவு உயர்ந்த்துள்ளதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன, கடல்மட்டம் உயர்ந்து வருவதும் அண்மைய வெள்ளப்பெருக்குகள், சூறாவளி,பூமியதிர்வு
என்பனவும் உலகவெப்பமயமாதலின் விளைவுகள்
என்கிறார்கள்.

No comments:

Post a Comment